Thursday, March 12, 2020

Manithatheni's activities: முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Manithatheni's activities: முகநூல் தகவல் (மனிதத்தேனீ):



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


சிந்தனைக் களம்*

ஒவ்வொரு
மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான
முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற
நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது
முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்.
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை
ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும்
வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி
உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள்
ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.
என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும்
போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது
சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்.
எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர்
சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள்
வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு
பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும்
பிரகாசிக்கும்.
“படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு
திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே…
சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு…

Manithatheni's activities: முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Manithatheni's activities: முகநூல் தகவல் (மனிதத்தேனீ):
 முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌🏾இருபது ரூவா பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா கொடுக்குறோம்...
ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...
🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...
💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...
👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...
👍🏻ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாமj இந்த மாதிரி மெசஜை கண்டும் காணாமல் விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்..... 🏐🤝💐🙏

Wednesday, July 3, 2019

கடவுளே!
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மனம் இறங்கி,
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!

மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!!
மழை பெய்ய அருள் செய்ய வேண்டும்!!!!!

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெரும் ஜோதி! தனிப்பெரும் கருணை!!

அருட்பெரும் ஜோதி!!!

 ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய!!!

திருச்சிற்றம்பலம் !

இறைவா !
எங்களின் தாகம் தீர்க்க இயற்கை அன்னை அருள வேண்டும் !

இயற்கை அன்னை அருள வேண்டும் !
இயற்கை அன்னை அருள வேண்டும் !!
இயற்கை அன்னை அருள வேண்டும் !!!

நன்றி ! வணக்கம் !!

Wednesday, May 22, 2019


இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

 💐இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ளும்..!!!

💐உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்...!!!

💐ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே...!!!


💐ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு...!!!



💐 பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு...!!!

💐ஒரு பணியைச் செய்யத் தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.....!!!!

💐மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்....!!!!

💐ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல....!!!!

💐உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்...
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்....
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து. தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்...!!!


💐குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது...!!!

💐கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்

💐வழிதவறிச் செல்வதை விட, வழி கேட்டுச்செல்வது நல்லது...,!!!

Wednesday, October 31, 2012

Tuesday, July 1, 2008

1. The will to succeed is important, but what's even more important is the will to prepare.
2. Aim at the stars.......For even if you fall short, you will land on the moon!